search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை அதிகாரிகள்"

    • இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.
    • குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை விவசாய வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் சரஸ்வதி (வயது 43), காத்தவராயன் (55), ஆசைத்தம்பி (53) ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது.

    இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
    • திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

    மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.

    இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீரோ பாயின்ட் பகுதியில் வந்த ஒரு சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
    • செயற்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி 3 குழுக்களாக தொடர்ந்து ஆய்வு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட வனப்ப குதியில் குறிப்பிட்ட பகுதிகள் களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேச்சிப்பாறையை ஒட்டிய கோதையாறு, சிற்றாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் புலி நடமாடுவதாக மக்கள் மத்தியில் அடிக்கடி செய்திகள் பரவுவதுண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் வந்த ஒரு சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தைபுலி கூண்டிலிருந்து தப்பி ஓடி பேச்சிப்பாறை அணைக்குள் விழுந்து உயிரிழந்தது.

    இதே போன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோதையாறு மின் நிலைய சாலையில் ஒரு புலியின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புப் கேமராவில் பதிவானது.மேலும் கடையாலுமூடு அருகே சக்ரபாணி பகுதியில் தனியார் ரப்பர் தோட்டத்தில் புலி ஒன்று நடமாடுவதாக தகவல் வெளியான நிலையில் தனியார் ரப்பர் தோட்டம் சார்பில் கண்காணிப்பு கேமரா வைத்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருசிலம்பு வேளிமலை பகுதியில் தனியார் ரப்பர் தோட்டப் பகுதியில் அதிகாலையில் பால்வடிப்புக்கு சென்ற தொழிலாளர்கள் புலியைப் பார்த்தாக கூறியதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பேச்சிப்பாறை அருகே வழுக்கம்பாறை சந்திப்பில் பஸ்சிலிருந்து இறங்கி சென்று கொண்டிருந்த சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவர் அனீஷ் வயது 20 மற்றும் அவரது சகோதரி ஆகியோர் இங்குள்ள ரப்பர் கழக மேலாளர் அலுவலகப் பகுதியில் ரப்பர் தோட்டத் தில் ஒரு புலி நிற்பதைப் பார்த்தாக குயிருப்புப் பகுதியில் கூறினார்.

    இந்நிலையில் நேற்று காலையில் இதே குடியிருப்பைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற தொழி லாளி இங்குள்ள மாடசாமி கோயில் பகுதியில் புலியைப் பார்த்தாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் வனத்துறை யினர் புலியின் நடமாட்டத்தை கண்கா ணிக்க வேண்டுமென்று ரப்பர் கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். களியல் வனச்சரக அதிகாரி மொய்தீன் அப்துல் காதர் கூறியதாவது:- சிற்றாறுவன பகுதியில் வந்தது புலியா அல்லது சிறுத்தையா என்பது பற்றி அதை பார்த்தவர்களிடம் விசாரனை செய்து வருகிறோம். அந்த பகுதியில் செயற்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி 3 குழுக்களாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அதன் கால் அடையாளங்கள் அழிந்துவிட்டது மற்றும் அது புலியா அல்லது சிறுத்தையா? என்பதை அதன் எச்சத்தை வைத்தும் ஆய்வு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறோம். எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சபட தேவையில்ைல. இரவு பகலாக வனத்துறை ஊழியர்கள் மூலம் தீவரமாக கண்காணித்து வருகிறோம்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காட்டு யானைகள் அடிக்கடி பலமனேர் மற்றும் பங்காரு பாளையம் பகுதியில் நடமாடி வருகின்றன.
    • சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கவுண்டன்யா வனவிலங்கு சரணாலயத்தில் 200 காட்டு யானைகள் உள்ளன.

    இந்த காட்டு யானைகள் அடிக்கடி பலமனேர் மற்றும் பங்காரு பாளையம் பகுதியில் நடமாடி வருகின்றன.

    கடந்த வாரம் பலமனேரிலிருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்த 3 காட்டு யானைகள் லாரி மோதி பரிதாபமாக இறந்தன.

    இதனைத் தொடர்ந்து யானைகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    இதற்கு இடையே இந்த வழியாக சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகள் நடந்து வருகிறது.

    அதிவிரைவு சாலையின் குறுக்கே யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை-பெங்களூர் விரைவுச் சாலையில் யானைகள் அதிகளவு கடக்கும் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    அதிவிரைவுச் சாலையில் எந்த இடத்திலும் யானைகள் வராமல் இருக்க பழைய தண்டவாளங்களை வாங்கி அதனை தடுப்புகளாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×